வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வீடு திரும்பினர்
வெளிநாட்டில் இருந்து வருகை தந்து, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52வது மற்றும் 521வது காலாட் படைப்பிரிவின் கீழ் கண்காணிக்கப்படும் வசாவிளன் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள், தனிமைபாபடுத்தல் காலம் நிறைவுற்ற நிலையில் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியா, கட்டார், குவைத் மற்றும் சைபிரஸ் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக சென்றவர்களே தற்போது நாட்டிற்கு திரும்பிய நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமம், காவத்தை, காலி மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த சுமார் 67பேர் இத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




