இயக்கச்சி றீ(ச்)ஷா பண்ணைக்கு அமெரிக்க தூதுவர் விஜயம்(Photos)
கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் விஜயம் செய்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் இன்றையதினம்(24.08.2023) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணைக்கு தனது விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது ஐபிசி, லங்காசிறி குழுமத்தின் தலைவரும், புலம்பெயர் தமிழ் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க தூதுவருடன் சென்ற குழுவினர் இன்றையதினம் றீ(ச்)ஷாவில் தங்கியிருந்து நாளையத்தினம் மன்னாருக்கும் செல்லவுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, சுற்றுலா பயணிகளாக வரும் வெளிநாட்டவர்களையும் பெரும்பாலும் ஈர்த்துள்ள சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா பண்ணையானது அனைவரினதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.










ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri