ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
பிரித்தானியா அரசாங்கம் ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதன்படி டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா, திமோர் - லெஸ்தே மற்றும் வாநுவாட்டு ஆகிய ஐந்து நாடுகளுக்கு இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்தி வருகின்றமையினால் இந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்தல் மற்றும் எல்லை பாதுகாப்பு
இந்த விசா கட்டுப்பாடுகள் புலம்பெயர்தல் மற்றும் எல்லை பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாரன சுவெல்லா பிரேவர்மேன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில், டொமினிக்காவும் வானுவாட்டுவும் முதலீடு செய்வபர்களுக்கு குடியுரிமை வழங்குவது, புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதை தெளிவாகக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்நாடுகள் பிரித்தானியாவுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு குடியுரிமை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
