இலங்கையிலும் உருமாறிய வைரஸ் திரிபு உருவாகும் அபாயம்
இலங்கையில் கோவிட் வைரஸ் பரவும் வேகத்திற்கு அமைய இலங்கையிலும் உருமாறிய புதிய வைரஸ் திரிபு உருவாகும் அபாய நிலை அதிகம் இருப்பதாக மருந்து மற்றும் சுகாதார முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் கலாநிதி சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உருமாறிய புதிய வைரஸ் திரிபு உருவாகினால், அதன் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் வைரஸ் சமூகத்திற்குள் பரவவில்லை என சுகாதார அதிகாரிகள் கூறினாலும் அது உண்மையல்ல எனவும் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளது எனவும் சஞ்சய பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் உருமாறிய வைரஸ் திரிபு புத்தாண்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்குள் பரவியுள்ளது என எச்சரித்த போது சுகாதார அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை.
தற்போது காணப்படும் நிலையில் மக்கள் முடிந்த வரையில் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டியது முக்கியமானது எனவும் சஞ்சய பெரேரா குறிப்பிட்டுள்ளார்.