அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்து அர்ச்சுனா தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், இது தொடர்பான ஆதாரங்களையும் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். இதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து எமது செய்திப்பிரிவு பொலிஸ் ஊடகப் பேச்சாளரை தொடர்பு கொண்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna) எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று (21) காலை நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது வாகனத்தில் விஐபி (VIP) விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காலை நாடாளுமன்றத்திற்கு சென்ற வேளை..
இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.
இந்நிலையில், ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
