இளம் வீரரிடம் முரண்பட்ட விராட் கோலி : வழங்கப்பட்டுள்ள தண்டனை
அவுஸ்திரேலியா(Australia) அணியின் தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ்(sam konstas) உடன் நேரடி மோதலில் விராட் கோலி(virat kohli), ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்திய அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்றையதினம்(26) ஆரம்பமாகியது.
விராட் கோலியின் செயல்
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஓட்டங்களை குவித்து 65 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
Elon musk change like button for #ViratKohli 🔥 Tap to See ❤️🔥🔥💥🚨
— it's cinema (@its_cinema__) December 26, 2024
- 1 Demerit Point.
- 20% of match fees.
For Virat Kohli in the incident with Sam Konstas.#INDvsAUS#Christmas #MerryChristmas#INDvAUS #ViratKohli𓃵 pic.twitter.com/zDq71ke49O
ஓவர்களுக்கு இடையில் பந்தை கையில் எடுத்து மறுமுனைக்கு நகர்ந்த விராட் கோலி சாம் கோன்ஸ்டாஸின் தோளில் வேண்டுமென்றே இடித்து சென்றுள்ளார்.
அப்போது சாம் கோன்ஸ்டாஸ், விராட் கோலியை நோக்கி ஏதோ கேட்க அவரும் பதிலுக்கு கோபமாக பேசும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதனிடையே எல்இடி ஸ்க்ரீனில் சாம் கோன்ஸ்டாஸிற்கு பிடித்த விடயங்கள் குறித்த சில தகவல்கள் ஒளிபரப்பப்பட்டன.
வழங்கப்பட்டுள்ள தண்டனை
அதில் உங்களுக்கு பிடித்த இந்திய வீரர் யார் என்ற கேள்விக்கு, விராட் கோலி தான் பிடித்த வீரர். அவர் செய்த விடயங்கள் அனைத்தும் மிரள வைக்கிறது என்று கூறியுள்ளதால் இந்த விடயம் இரசிகர்களுக்கிடையில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், சாம் கொன்டாஸ்(Sam Contas) தோளில் மோதி அவருடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தியதற்காக விராட் கோலிக்கு(Virat Kohli) கிரிக்கெட் அதிகாரிகள் போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதித்துள்ளதுடன், ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
24 மாத காலத்தில் ஒரு வீரர் நான்கு டீமெரிட் புள்ளிகள் பெற்றால் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு குறைந்த ஓவர் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 6 விக்கட்டுக்களையும் இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் 50 ஓட்டங்களை கடந்தனர்.
பந்து வீச்சில் பும்ரா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
மேலதிக தகவல்: இந்ரஜித்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |