இலங்கையில் வெடித்த வன்முறையில் தீக்கிரையாகிய வாகனங்கள் (Video)
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அமைதியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் நேற்றைய தினம் வன்முறையாக மாறியிருந்தது.
கொழும்பில் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நேற்று தாக்கியதையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் அதிகரித்தன.
அமைதியான போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்களால் ஆத்திரமடைந்த மக்கள், நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி, ராஜபக்ச ஆதரவு போராட்டக்காரர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளையும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் தாக்கத் தொடங்கினர்.
இதில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரு இல்லங்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அவர்களின் அலுவலகங்கள் உட்பட வாகனங்கள் அனைத்தும் அடித்து சேதமாக்கப்பட்டதுடன், எரித்து தீக்கிரையாக்கப்பட்டது.
மகிந்தவின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பல வாகனங்கள், பேருந்துகள்களை மக்கள் எரித்து தீக்கிரையாக்கியிருந்தனர்.
நேற்று எறியூட்டப்பட்ட பேருந்துகள் இன்று அதிகாலை வரை அனைக்கப்படாது எரிந்துக்கொண்டே இருந்தது. இவ்வாறு எரியூட்டப்பட்ட பேருந்துகள் முற்றாக எரிந்த நிலையில் கொழும்பின் பல இடங்களிலும் வீதிகளும் எரிந்து சாம்பலாகிய நிலையில் தற்போதுவரை காட்சியளிக்கின்றது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 10 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri