யாழில் வன்முறை குழு அட்டகாசம்: நகை மற்றும் பணம் கொள்ளை
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டத்துடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டுக்குள் பகுந்த வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டு கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டில் இருந்த இரண்டு இலட்சத்து பதினோராயிரம் ரூபா பணம், மூன்று பவுண் சங்கிலி மற்றும் இரண்டு பவுண் காப்பு என்பவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், அயல் வீட்டில் இருந்த சிசிரிவி காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் மன்னிப்பு கேட்பதற்காக வந்தவேளை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
அவரை விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
