ஏறாவூரில் தாண்டவமாடிய வன்முறைகள்: பிரதான சந்தேக நபர் உட்பட 12 பேர் கைது (Photos)
மட்டக்களப்பு - ஏறாவூர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வன்முறைகளில் ஈடுபட்ட பிரதான நபர் உட்பட 12 பேரைக் கைது செய்துள்ளதுடன், வன்முறைக் கும்பலில் சம்பந்தப்பட்ட மேலும் பலர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
பிரதான சந்தேகநபர் தனது அணியைச் சேர்ந்த ஏனையோரையும் வன்முறையில் ஈடுபடுமாறு கூவி அழைப்பது போன்று காணொளிக் காட்சியிலிருந்தமையால் அதன் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஏறாவூரில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மூன்று ஆடைத் தொழிற்சாலைகளைச் சேதமாக்கியிருந்ததோடு, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் வாடகைக் கட்டிடமான அவரது அலுவலகம், அவரது சகோதரரின் வீடு, சகோதரரின் புதல்வருக்குச் சொந்தமான உணவகம் ஆகியவற்றைத் தாக்கி தீயிட்டுக் கொளுத்தியிருந்தனர்.
மூன்று ஆடைத்தொழில்சாலைகள் பலத்த சேதத்திற்குள்ளாகப்பட்டது. அங்கிருந்த அதி நவீன ஆடைத்தொழில் இயந்திரங்கள், மின் பிறப்பாக்கிகள், ஜன்னல் கண்ணாடிகள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
இதனால் பலகோடி ரூபாய் பெறுமதியுள்ள சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புன்னைக்குடா வீதியை அண்டி அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் சுமார் ஐந்நூறு பேரளவில் கடந்த வியாழக்கிழமை தமது ஆடைத் தொழிற்சாலையைச் சேதமாக்கிய வன்முறையாளர்களைக் கைது செய்யுமாறு கோரி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏறாவூரிலுள்ள சர்வதேச தரத்தில் அமைந்த இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் சுமார் 1600 தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் நேரடியாகத் தொழில் வாய்ப்புப் பெற்றிருக்கின்ற அதேவேளை சுமார் 5000 குடும்பங்கள் மறைமுக தொழில் வாய்ப்பின் மூலம் நன்மை அடைந்து வந்ததாக அங்கு பணியாற்றுவோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் புன்னைக்குடா வீதியிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை மீண்டும் இயங்க முடிந்தளவிற்குச் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
