பெண் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை! ஊடக அமைச்சரின் கருத்து
முறையான முறைப்பாடு பதிவு செய்யப்படும் வரை செய்தி அறைகளில் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாகக் கூறப்படும் #MeToo பிரசாரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என்று ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
சமூக ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் தனது அமைச்சு ஆரம்பிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு சம்பவம் நடந்தால் காவல்துறை அல்லது ஊடக அமைச்சகத்திடம் முறைப்பாடு செய்யப்பட வேண்டும். இந்தநிலையில் முறையான முறைப்பாடு இல்லாமல் எந்தவொரு ஊடக நிறுவனம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பது ஊடகங்களில் தலையிடுவதாகக் கருதப்படும் என்று ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பெண் பத்திரிகையாளர்களின் #MeToo இயக்கம் சமூக ஊடகங்களில் வலுவான ஆதரவை சேகரித்து வருகிறது.
ஒரு பெண் செய்தியாளர், தாம், தனது சக ஊழியரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறிய பின்னர் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் மற்றொரு பெண் செய்தியாளர், தாமும் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.