தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி விருந்துபசாரம்! - 24 பேர் மாட்டினர்
குருநாகல், ரம்பவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் பங்கேற்ற 24 பேரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 12 மதுபான போத்தல்கள், வெற்றுமதுபான போத்தல்கள் மற்றும் 1,75,000 ரூபா பணம் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
முகத்தளப்புத்தகத்தினூடாக நண்பர்களாகிய குழுவினர் இணைந்து தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது விருந்துபசார இடத்தில் 24 பேர் இருந்துள்ள நிலையில் மேலும் 22 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
