நுவரெலியா மாநகர சபையினால் கோவிட் தனிமை விதிகள் மீறல்! - விசாரணைக்கு உத்தரவு
நுவரெலியா மாநகர சபையினால் கோவிட் தனிமை விதிகள் மீறப்பட்டமை குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நுவரெலியா மாநகரசபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் மூலம் கோவிட் தடுப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகேயின் தகவல்படி குறித்த நிகழ்வுகள் கோவிட் தனிமை விதிகளை மீறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மாநகரசபையின் ஊழியர்கள் அவர்கள் பகல் போசனத்துக்காக 175 மில்லிலீற்றர் மதுபானத்தை விநியோகித்தமை மற்றும் கிரகரி வாவிக்கு அருகில் களியாட்ட நிகழ்வை நடத்தியமை, இந்த நிகழ்வின்போது பலர் ஒரு மீற்றர் தூரத்தை கடைப்பிடிக்காமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.