நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக முறைப்பாடு பதிவு!
நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று இன்று (03.12.2025) பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுசந்த குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மின் துண்டிப்பு
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட உடனே தொலைத்தொடர்பு வலையமைப்பு செயலிழக்கப்பட்டு மக்களுக்கான தகவல் அறியும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசிலமைப்பு சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்து வாடிக்கையாளர்களிடமிருந்து தொலைதொடர்பு சேவைகளுக்கான கட்டணங்களை அறவிட்ட நிலையில் தொலைத்தொடர்பு சேவை வழங்காததால் வாடிக்கையாளரின் தகவல் அறித்தல் மீறப்பட்டுள்ளது.
மேலும் இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. விசேடமாக பன்னல பகுதியில் முதியோர் இல்லத்தில் இருந்தவர்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியாததால் ஒரே இடத்தில் இருந்ததால் 7 முதியோர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதற்கும் தயாராக உள்ளோம் எனவும் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுசந்த குணவர்த்தன தெரிவித்துள்ளார்.