அம்பிட்டிய தேரரின் அத்துமீறல் நடவடிக்கையின் பின்னணியில் ஒரு பெண் (Photos)
மட்டக்களப்பு மாவட்டம் திபுல பெத்தான எனும் இடத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் தலைமையில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வழிநடத்தலில் நேற்றைய தினம் (16.10.2023) இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை வைக்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரத குடியேற்ற வாசிகளுக்கும் சிறந்ததொரு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதற்கு எதிர் மாறாக சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய அராஜகம் அரங்கேறியுள்ளது.
விகாரை நிர்மாணிப்பதற்கான முயற்சி
இந்த அத்துமீறிய நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தனது முகநூல் பதிவு ஒன்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் 'பெகர விகாரை " என அழைக்கப்படும் விகாரையினை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சியே இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சார்ல்ஸ், மற்றும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக அகற்றப்பட்ட அத்துமீறிய சிங்கள குடியேற்றமும் விகாரையும் மீளவும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.