நாடாளுமன்ற உரை தொடர்பில் வைத்தியர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: வினோ நோகராதலிங்கம்(Video)
சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் தாம் ஆற்றிய உரையினை ஊடகம் ஒன்று திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளது எனவும் இதனால் வைத்தியர்கள் பாதித்திருந்தால் மன்னிப்பு கோருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(14.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் நான் உரையாற்றி இருந்தேன்.
அதனை ஊடகம் ஒன்று திரிவுபடுத்தி அதன் ஊடாக வைத்தியர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை நான் அறிந்துள்ளேன்.
அது தொடர்பிலான விளக்கத்தினை கொடுக்கவேண்டிய நிலையில் இதனை தெரிவிக்கின்றேன்.'' என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதாரத்துறை அடைந்துள்ள பாதிப்பினையும், அதனால் வைத்தியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்களை தொடரும் காணொளியில் காணலாம்...