விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை இன்று உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பிரதிவாதி சமர்ப்பித்த ஆரம்ப ஆட்சேபனை மீதான உத்தரவுக்கு அமையவே நேற்று (12.12.2023) இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு
இதன்படி விமல் வீரவன்சவின் பிணைமுறிகள் நீதிமன்றில் முன்னிலையாகி உண்மைகளை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, மேற்படி மனுவை பிறப்பித்ததுடன், அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 5 வருடங்கள் அமைச்சராக இருந்த அவர் சொத்துக்கள் மற்றும் சம்பளத்தின் மூலம் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
