குமுழமுனை கிழக்கு கிராமசேவகர் பிரிவில் கிராமமட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு உருவாக்கம்
குமுழமுனை கிழக்கு கிராமசேவகர் பிரிவில் கிராமமட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று, அதன் அடிப்படையில் கிராமமட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு உருவாக்கப்பட்டது.
கடந்த “டித்வா” சூறாவளியின் போது நாங்கள் எதிர்கொண்ட முக்கியமான சவால்களில் ஒன்று, கிராமசேவகர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் உடனடி தொடர்புகளை ஏற்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களாகும்.
இவ்வாறான அவசரநிலைகளில் கிராமங்களில் ஏற்படும் அனர்த்தங்களை திறம்பட முகாமைத்துவம் செய்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அமைப்பு அவசியமானதாக இருந்தது.
2005 ஆம் ஆண்டிற்கான இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு கிராம மட்டத்திலும் அனர்த்த முகாமைத்துவக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழு கிராமசேவகரின் தலைமையில் இயங்க வேண்டும் என்பதுடன், கிராமத்தில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களைத் திரட்டியும், அவசரகால நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் செயல்பட வேண்டியதாயுள்ளது.



