தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் திகதி (நாளை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து செய்திகளை உலா வந்த நிலையில், தன்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு நன்றி
இந்நிலையில், நான் நலமுடன் இருக்கிறேன். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம்பிடித்துள்ளோம். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், என் தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்' என விஜயகாந்த் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.