யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மானம்பூ உற்சவம் (Photos)
நல்லூர் கந்தசுவாமி ஆலயம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இன்று (24.10.2023) காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையை தொடர்ந்து குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மானம்பூ உற்சவத்திற்கு பலபாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
திருநெல்வேலி சிவாகாமியம்மன் ஆலயம்
நவசக்தி வடிவமாக அருள்விளங்கும் முப்பெரும் தேவிகளின் நவராத்திரி உற்சவத்தின் 9 நாள் உற்சவம் யாழ்.மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருநெல்வேலி சிவாகாமியம்மன் ஆலயத்தில் சிவஸ்ரீ ஞான ரத்தன வேல் சிவாச்சாரியரினால் மகிஷா சூரசங்கார உற்சவம் நடத்தப்பட்டது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அந்திசாயும் நேரத்தில் நேற்றையதினம் மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
மேலதிக தகவல் : கஜி