விஜய்க்கு ஆட்சியை கொடுப்பதில் சிக்கல் - கைவிரித்தார் ஆளுநர்
ஆட்சி அமைக்க விஜயை அழைக்காததற்கான காரணத்தை ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ஆதரவு அளிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டியது இல்லை என்றார்.

எந்த, எந்த கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களை விஜய் தர வேண்டுமென்பதை மட்டுமே தான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை இல்லாத ஒருவரை ஆட்சி அமைக்க அனுமதித்தால், குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது.
சட்டசபையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதது விஜய்யின் பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் பிரச்சனையும் கூட என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam