எதிர்பார்ப்புடன் இருந்த 2 தொகுதிகளில் திமுக படுதோல்வி - தமிழக ஆட்சியை தட்டி தூக்கப்போகும் விஜய்..!
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 100-க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றிப் பெற்று தவெக கட்சி புதியதொரு சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து, தொங்கு சட்டசபை முறைமை இந்த வருடம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(04) காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார்.
பெரும்பான்மையாக வெற்றி வாகை சூடிய தவெக
இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 109 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1,00,582 வாக்குகள் பெற்று 44,583 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதே போன்று, திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். அவர் 82,885 வாக்குகள் பெற்று 26,432 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கொளத்தூரில் முதலில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், தொடர்ந்து திருச்சி கிழக்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி பிரசாரம் மேற்கொண்டார்.
விஜய் பிரசாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.