சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்

Vijay Tamil nadu Tamil Nadu Election 2026
By Dhayani May 10, 2026 12:15 PM GMT
Report

புதிய இணைப்பு

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கம், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு நிலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதையும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதையும் குறிக்கோளாக கொண்டதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும், இடையிடையே முக்கிய உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமை செயலகத்தில் ஒரு முக்கிய உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.  

மூன்றாம் இணைப்பு

சற்றுமுன்னர் சென்னையின் கிண்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் நோக்கி முதலமைச்சர் விஜய் புறப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக தவெக எம்.எல்.ஏ.வான கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவியேற்பு விழா தற்போது ஆளுநர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய்,ஆளுநர், முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமை பேசுபொருளாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

சென்னை தலைமைச்செயலகத்தில் அலுவலக பணிகளை தொடங்கிய முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை பதவியேற்று 3 திட்டங்களில் கையெழுத்திட்ட முதலமைச்சர் அதனை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுள்ளது.

முதலாம் இணைப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதனையடுத்து பாதுகாப்புப்படைகள் சூழ அரசு வாகனத்தில் முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய் தலைமை செயலகத்தில் அரியனையில் சற்றுமுன்னர் அமர்ந்துள்ளார்.

இதன்போது தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சருக்கு வீதிகளின் இருபக்கமும் மக்கள் சூழ்ந்து தனது வாழத்துக்களை தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து முதலமைச்சர் அரியனையில் அமர்ந்த விஜயை முக்கிய அதிகாரிகள் வரவேற்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்கமைய நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US