பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பௌத்தப் பிக்கு மீது தாக்குதல்
பொலன்னறுவை - அரலகம்வில பிரதேசத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பௌத்தப் பிக்கு தாக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று பதிவாகி உள்ளது.
பூரணை தினமன்று விகாரையில் போதி பூஜையை நடத்திக் கொண்டிருந்த பௌத்தப் பிக்கு மற்றும் பக்தர்கள் மீது கும்பலொன்று தாக்குதல் நடத்தி பணம் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
15 பேர் கொண்ட கும்பல்
அரலகங்வில பிம்புரத்தேவ சுதர்சன சுதர்மாராமய விகாரைக்குள் புகுந்த சுமார் 15 பேரைக் கொண்ட கும்பலே இந்த தாக்குதலையை நடத்தியுள்ளது.
பௌத்தப்பிக்கு மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மோட்டார்சைக்கிளின் தலைக்கவசத்தை கொண்டு தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அரலகம்வில போலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |