திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலையில்(Trincomalee) வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தினை நேற்று (02.07.2024) திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
வாசகங்கள் அடங்கிய பதாகைகள்
திருகோணமலை உட்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை வீதியில் இருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவணியாக பேச்சு வார்த்தை போதும் இனி நியமனத்தை வழங்கு உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது கிழக்கு ஆளுநர் செயலக முன்றலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் செயலகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam