வடக்கில் பிரதேச செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
வவுனியா - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச் சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
வடக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கை
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ வதிவிடம் ஆகியவற்றில் கடந்த 30ஆம் திகதி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது 65 லீட்டர் எரிபொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அலுவலக மின் பிறப்பாக்கியின் தேவைக்கான 50 லீட்டர் டீசல், பிரதேச செயலாளரின் சொந்த பாவனைக்காக சேமித்து வைத்திருந்த 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 5 லீட்டர் மண்ணெண்ணெய் என்வற்றையே பொலிஸார் மீட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலக ஊழியர்களின் கோரிக்கை
இந்த நிலையில் பிரதேச செயலாளரை பழிவாங்கும் நோக்குடன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் நடந்து கொண்டதாகவும், திட்டமிட்டு பிரதேச செயலாளரை அசௌகரியத்திற்கு உட்படுத்தி அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அதனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி பிரதேச செயலக ஊழியர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே வவுனியா பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரை அவமதிக்கும் விதமாகச் செயற்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் மற்றும் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸாரே இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துகொண்டமை கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் சட்டவிரோதமான முறையில் எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை அத்துமீறியதாகவும் குறித்த பிரதேச செயலாளரை தனிப்பட்ட ரீதியில் அவமதிப்பதாகவும் அரச சேவையையும் மலினப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக திரண்ட வடமாகாண நிருவாக சேவைகள் கிளை தொழில் சங்கத்தினர் நீதி கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
இதில் வவுனியா,மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த நிருவாக சேவை வடமாகண கிளை அதிகாரிகள் மற்றும் கிராம சேவையாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
கவனயீர்ப்பு நடவடிக்கையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயல பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினையும் நடத்தியுள்ளார்கள்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்
நல்லூர் பிரதேச செயலகம்
சங்கானை பிரதேச செயலகம்
அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினுள் பொலிஸார் உட்புகுந்து எரிபொருள் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் இன்று(8) ஒன்று கூடிய இந்தக் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் அரை மணிநேரம் வரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பிரதேச செயலகம்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தால் இன்று(8) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை மீட்டமை தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை கண்டித்து குறித்த கவனயீர்ப்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினரால் சில நிமிடங்கள் பதாகைகளை தாங்கியவாறு இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தை தொடர்ந்து ஊடக சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக திரண்ட வடமாகாண நிர்வாக சேவைகள் கிளை தொழில் சங்கத்தினர் நீதி கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்படி வவுனியா,மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த நிருவாக சேவை வடமாகண கிளை அதிகாரிகள் மற்றும் கிராம சேவையாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
கவனயீர்ப்பு நடவடிக்கையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயல பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினையும் நடத்தியுள்ளார்கள்.
இதன்போது இலங்கை நிருவாக சேவை வடமகாண கிழையின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட காணி மேலதிக
அரசாங்க அதிபருமான சி.குணபாலன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி- சதீஸ் ,யது,கஜிந்தன்