பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தம்பதியினரின் காணொளி வெளியானமை குறித்து விமர்சனம்
பாணந்துறை பொலிஸ் நிலையத்தில், ஒரு தம்பதியினர் விசாரிக்கப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த காணொளி தொடர்பில் தற்போது விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.
மூத்த சட்டத்தரணி திஸ்யா வேரகொட உட்பட்ட சட்ட வல்லுநர்களும் இதனை கண்டித்துள்ளனர்.
பொலிஸில் முறைப்பாட்டை மேற்கொள்ள சென்ற தம்பதியினரின் காணொளியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளக தகராறு
தம்பதியினரின் ஒப்புதல் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி, குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகவும், மக்கள் சட்ட அமுலாக்கத்தை அணுகுவதை தடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவிய இந்த காணொளியில் குறித்த தம்பதியினர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதைக் காட்டுகிறது.
இந்தநிலையில் குறித்த பதிவும் வெளியிடலும், உள்ளக தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri