ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரவுக்கு வடக்கு கிழக்கில் வெற்றி கொண்டாட்டம்
இலங்கை ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கிண்ணியா புஹாரியடி சந்தியில் அரவது கட்சி ஆதரவாளர்கள் திசை காட்டி வடிவிலான கேக் கினை வெட்டி வெற்றிக் களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திருகோணமலை நகர் பகுதியிலும் அவரது கட்சி ஆதரவாளர்கள்பட்டாசு கொளுத்தி வெற்றிக் களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார்
இந்த நிலையில் மன்னாரிலும், அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையை ஆதரித்து பொதுமக்கள் கொண்டாடியுள்ளனர்.
மன்னார் நகர்புற பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power )மன்னார் மாவட்ட கிளையினால் குறித்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது பொங்கல் பொங்கி மக்களுக்கு வழங்கப்பட்டு தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர்.
இதன் போது அவர் வாக்குறுதி வழங்கிய மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
செய்தி - ஆசிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
