வெசாக் கொண்டாட்டம் நிறைவுற்றப்பின் நுவரெலியா நகரிற்கு நேர்ந்த கதி!
சுற்றுலாவிற்கு சிறப்புமிக்க இடமாக திகழும் நுவரெலியா நகரம் தற்போது அதிகரித்து வரும் கழிவுப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றது.
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மத்திய சந்தைக்கு எதிரில் அதிகமாக வெசாக் கூடுகளும் அதன் கழிவுகளும் சிதறி கிடப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் கடந்த (10) ஆம் திகதி முதல் (16) திகதி வரை தேசிய வொசாக் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது.இந்த நிலையில் ஏராளமான வெசாக் மின் தோரணங்கள் நிர்மாணிக்கப்பட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் வெசாக் கூடுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டது.
வீதியோரத்தில் கழிவு
எவ்வாறாயினும் (17) ஆம் திகதி முதல் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு குழுவினரும் வெசாக் கூடுகளையும் அதற்கு பயன்படுத்திய கழிவு பொருட்களையும் அதே இடங்களில் வீசி சென்றுள்ளதாகவும் இதனால் வீதியோரத்தில் நடந்து செல்ல முடியாமல் உள்ளதாகவும் குறித்து வீதியினை பயன்படுத்துவோர் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் வெசாக் கூடுகள் மற்றும் தோரணங்கள் அமைத்து தற்காலிகமாக தங்கியிருந்து பாதுகாத்து வந்தவர்களும் தங்கியிருந்த இடங்களில் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதி பெட்டிகள் கடதாசிகள் என குப்பைகளாக வீசி சென்றுள்ளனர்.
இதனால் இரவு நேரங்களில் உணவு கழிவுகளை தேடி நாய்கள் மற்றும் வனவிலங்குகள் வந்து செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக நடவடிக்கை
மேலும் இது சுகாதார பிரச்சினையாகி நோய் கிருமிகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.இதில் ஈக்கள் மற்றும் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்து சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கு பல நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே நுவரெலியா மாநகரசபை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதில் குறிப்பாக வெசாக் கொண்டாடம் ஆரம்பித்த நாள் முதல் நுவரெலியாவிற்கு வருகை தந்த பக்தர்கள் பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் உட்பட ஏராளமான கழிவுகளை நகரில் விட்டுச் சென்றதால் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
