அலங்கார பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதால் 90 கோடி ரூபாவை சேமித்துள்ளோம்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினோம் அதனால் 90 கோடி ரூபாவை சேமித்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (05.05.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

90 கோடி ரூபாய்
“அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினோம். அலங்காரம் என்னும் விடயதானத்திற்குள் தான் வெசாக் அலங்காரங்களும் உள்ளடங்கியுள்ளன.
இதனால் அலங்காரங்கள் குறைந்து விட்டதா என்ற கேள்வி எனக்குள் உள்ளது.
இதற்கு முன்னர் பல பிரிவுகளாக 90 கோடி ரூபாய்க்கு அலங்காரங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை அந்த 90 கோடியையும் தடுத்துள்ளோம். எம்மால் முடிந்தததை இந்த நாட்டுக்கு செய்யவேண்டும் என உறுதிகொள்ள வேண்டும்“என தெரிவித்துள்ளார்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri