வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் வழங்கும் நடவடிக்கை மும்முரம்
வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தின் தன்சல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் புத்தரின் உருவத்துடன் கூடிய காட்சிக்கூடம் ஒன்று பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன், கொட்டகை அமைத்து தன்சலும் வழங்கப்பட்டுள்ளது.
மரவள்ளி கிழங்கு சம்பலுடன் தன்சலாக வழங்கப்பட்டது. வீதியால் சென்ற பலரும் நீண்ட வரிசையில் நின்று அதனைப் பெற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் பௌத்த மதகுரு, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நா.கமலதாசன், உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் நிலையம் முன்பாகவும் பொலிசாரால் தன்சல் வழங்கப்பட்டது. அவர்களும் மரவள்ளி கிழங்கு மற்றும் சம்பல் வழங்கி வைத்தனர்.
மேலும், வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மதியச் சாப்பாடு தன்சலாக வழங்கப்பட்டதுடன், பல இடங்களில் ஐஸ்கிறீமும் தன்சலாக வழங்கப்பட்டது.



மருதங்கேணி
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு இன்று (13) மருதங்கேணி சந்தியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு குளிர் பானம் மற்றும் குளிர்களி வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வானது காலை 10:30 ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றது.
நிகழ்வில் வடமராட்சி கிழக்கில் இருந்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வடமராட்சி கிழக்கு மக்கள் சிறுவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு மருதங்கேணி பொலிஸ் தலைமை அலுவல கத்தில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


திருகோணமலை
வெசாக் தினத்தினை முன்னிட்டு வெசாக் அலங்கார தோரனை திருகோணமலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ண சேகர கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
பொது மக்கள் பலர் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.
இதில் தேசிய மக்கள் சக்தி திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam