இலங்கையில் அனைவருக்கும் அவசர எச்சரிக்கை - மரணம் கூட நிகழலாம்: முக்கிய அறிவுறுத்தல்
உஷ்ணமான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக, பாடசாலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது தொடர்பான பயிற்சிகளை முடிந்தவரை அதிகாலை வேளைகளில் மாத்திரம் முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நண்பகல் வேளையிலேயே சூரிய வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுவதால், இவ்வாறான வெளிப்புற நிகழ்வுகளை அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் ஏற்பாடு செய்வது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.
கடும் வெயில்
குறிப்பாக, கடும் வெயில் நிலவும் மதிய நேரங்களில் மாணவர்களை நீண்ட நேரம் மைதானங்களில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பயிற்சிகளைத் திட்டமிடும்போது காலநிலையைக் கருத்திற்கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறான உஷ்ணமான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக நீரிழப்பு ஏற்பட்டு இதயம் மற்றும் மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நிகழலாம் என கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.