இலங்கை தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு ஜூன் 2023 இல் 21% இலிருந்து அக்டோபர் 2023 இல் 9 வீதமாக குறைந்துள்ளதாக வெரிடே ஆய்வின் தேசத்தின் மனநிலை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு, 2023 ஜூனில் 12 வீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் அது 6 வீதமாகக் குறைந்து, தேசத்தின் ஒட்டுமொத்த திருப்தியில் கணிசமான சரிவைக் காட்டுகிறது.
பொருளாதார நம்பிக்கை
அத்துடன் பொருளாதார நம்பிக்கை மதிப்பெண் ஜூன் மாதத்தில் எதிர்மறை (-) 44 இலிருந்து அக்டோபரில் எதிர்மறை (-) 62 ஆக குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
வெரிடே ஆய்வின் மூட் ஒஃப் தி நேசன், கருத்துக் கணிப்பு வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படுகிறது, அது நாடு முழுவதும், தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் பதில்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அரசாங்க ஒப்புதல் என்ற ஆய்வின்போது தற்போதைய அரசாங்கம் செயல்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா அல்லது ஏற்கவில்லையா? என்ற கேள்விக்கு, 9 வீதமானோர் ஒப்புதல் அளித்துள்ளனர். 7 வீதமானோர் தங்களுக்கு எந்த கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இலங்கை திருப்தி
இலங்கை திருப்தி: என்ற ஆய்வின்போது பொதுவாக, இலங்கையில் நடக்கும் செயற்பாடுகளில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா? என்ற கேள்விக்கு, 6 வீதமர்னோர் மட்டுமே திருப்தியடைவதாகக் கூறியுள்ளனர்.
பொருளாதார நம்பிக்கை என்ற ஆய்வில், ஜூன் மாதத்தில் எதிர்மறை (-) 44 ஆக இருந்த மதிப்பெண் அக்டோபரில் எதிர்மறை (-) 62 ஆக வீழ்ச்சியடைந்ததால், பொருளாதார நம்பிக்கை மோசமடைந்தது.
இந்தநிலையில் அரசாங்கம், நாடு மற்றும் பொருளாதாரம் தொடர்பான பொது ஒப்புதல், திருப்தி மற்றும் நம்பிக்கையை மதிப்பிடுவதை 'தேசத்தின் மனநிலை' கணக்கெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வெரிடே ரிசர்ச் என்ற ஆய்வு தெரிவித்துள்ளது.





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
