வெனிசுவேலா மீதான அதிரடி நடவடிக்கை : எரிசக்தி நிறுவனங்களின் பங்குகள் உயர்வு
வெனிசுவேலாவின் பரந்த எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்கள் இனி எளிதாகப் பயன்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பால், பங்குச் சந்தையில் செவ்ரான் (Chevron) மற்றும் ஹாலிபர்டன் (Haliburton) போன்ற எரிசக்தி நிறுவனங்களின் பங்குகள் 4 முதல் 7வீதம் வரை உயர்ந்துள்ளன.
அதேவேளை, இந்த அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சர்வதேச பதற்றங்கள் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கித் திரும்பியுள்ளனர்.
புவிசார் அரசியல் நெருக்கடிகளால்
இதனால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,412 டொலாராக அதிகரித்துள்ளது.

மேலும், புவிசார் அரசியல் நெருக்கடிகளால் நாடுகளின் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கும் என்ற கணிப்பில் ஐரோப்பிய பாதுகாப்புத் துறை சார்ந்த (Defence Stocks) நிறுவனங்களின் பங்குகளும் 8வீதம் வரை உயர்வைக் கண்டுள்ளன.
எனினும், சிதைந்துள்ள வெனிசுவேலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பைச் சீரமைக்க பல பில்லியன் டொலர் முதலீடும் நீண்ட காலமும் தேவைப்படும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |