திகன கலவரத்தின் பிரதானி முக்கிய பதவியில் - தேரர் ஆதங்கம்
நமது நாட்டில் இன ரீதியாக, மத ரீதியாக ஒரு சில வேறுபாடுகளை, முரண்பாடுகளை, பிரச்சினைகளை உருவாக்கிய, உருவாக்க காரணமாக இருந்தவர்களை தான் இன்று சில அரசியல் கட்சிகளில் பார்ப்பதாக தல்பொத்த தம்மாஜோதி தேரர் (Ven.Thalpotha Dhammajothi Thero) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவித்து ஒற்றுமையை உடைத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.
இன்றும் அதுதான் நடந்து கொண்டுள்ளது. இவை இன்று பெரிதாகவே நடக்கின்றது.
அவற்றின் வெளிப்பாடுகளை நாம் கடந்த வாரங்களில் பார்த்தோம். நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை.
விபரமாக கூறவும் விரும்பவில்லை. அன்று திகன கலவரத்திற்கு பிரதானமாக இருந்தவரை தான் இன்று ஒரு முக்கிய பதவியில் அமர்த்தியுள்ளார்கள்.
இப்படியெல்லாம் இருக்கும் போது நாம் எப்படி இன, மத ரீதியான ஒற்றுமையை பற்றி பேசுவது?
ஆகவே நான் இவற்றை எண்ணி மிகவும் கவலையடைகின்றேன் என கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri