தமிழ்தேசிய பற்றாளர் வேலுப்பிள்ளை தவராஜா காலமானார்
இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், தமிழ்தேசிய பற்றாளருமான வேலுப்பிள்ளை தவராஜா காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி தனது 68ஆவது வயதில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற கணித ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், இலக்கியவாதியாகவும், ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவந்த இவர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்சங்கத்தின் செயலாளராகயிருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (12) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு கல்லியங்காடு இந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri
