வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு
வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் படுகாயம்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் சிகிச்சைக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூடானது இன்று (13) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உடுகம்பொல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரொருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸார் உள்ளிட்ட மூன்று விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[L2XSM9V
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam