டீசல் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருத்த வாகனங்கள்: போக்குவரத்து நெரிசல் (PHOTOS)
வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று இரண்டாவது நாளாகவும் காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
எரிபொருள் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு காரணமாக எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாகன சாரதிகளும் எண்ணை நிரப்புவதற்காக வாகனங்களை வீதியோரத்தில் நிறுத்தி வைத்துள்ளமையினால் சில எண்ணை நிரப்பு நிலையங்கள் முன்னால் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தன.
அத்துடன், வாகன சாரதிகள் மற்றும் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் டீசல் எண்ணெயினை தேடி ஒவ்வொரு எண்ணை நிரப்பு நிலையங்களை நோக்கிச் சென்று வருவதாகவும், இதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.














