ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்த வாகன இறக்குமதி
2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய வங்கி அறிக்கையின்படி, செப்டெம்பரில் மட்டும் வாகன இறக்குமதிகள் 286 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளன.
அதிகபட்ச மாதாந்த செலவு
2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பெப்ரவரியில் இலங்கை தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்கியது.

அதன்படி, இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்கான அதிகபட்ச மாதாந்த செலவு செப்டெம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்கான மாதாந்திர செலவாக ஜனவரி 29.1 மில்லியன் அமெரிக்க டொலர், பெப்ரவரி 22.3 மில்லியன் அமெரிக்க டொலர், மார்ச் 54.0 மில்லியன் அமெரிக்க டொலர், ஏப்ரல் 145.6 மில்லியன் அமெரிக்க டொலர், மே 125.2 மில்லியன் அமெரிக்க டொலர், ஜூன்169.6 மில்லியன் அமெரிக்க டொலர், ஜூலை 206.0 மில்லியன் அமெரிக்க டொலர், ஆகஸ்ட் 255.7 மில்லியன் அமெரிக்க டொலர், செப்டம்பர் 286.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |