வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகன விற்பனை சந்தை
பயன்படுத்திய வாகன விற்பனை சந்தைக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கடன் வட்டி வீதத்தை குறைப்பதாக மத்திய வங்கி ஆளுநர் உறுதியளித்ததாகவும் சங்கம் கூறுகிறது.

மேலும், பயன்படுத்திய வாகனங்களுக்கான வட்டி குறைக்கப்பட்டால், பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்வதற்கான சந்தையை மேலும் பராமரிக்க முடியும் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam