வாகனங்களின் இறக்குமதியினால் கிடைத்துள்ள பெருந்தொகை பணம்! வெளியான தகவல்
2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் 316, 000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகூடிய வரி வருவாய்
நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்த பின்னர் அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது.
அத்துடன்,அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை' 1,000சிசி 'இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளது.
அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96 சதவீதம் ஆகவும் பதிவாகியுள்ளது.