மீண்டும் ராஜபக்சர்கள் யுகம்..! அரசாங்கம் சதி செய்வதாக நாமல் தரப்பு புலம்பல்
மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(02.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்து இழைத்த தவறை திருத்துவதற்கு தயாராகியுள்ளனர்.
நாமலுக்கு வாய்ப்பு..
இதன்படி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு இந்த அரசாஙக்ம் பல சதிகளை செய்து வருகின்றது.
நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும், மக்கள் இதனை தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

அரசாங்த்தின் மீதும், ஆட்சியாளர்களின் மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கைக் கிடையாது. மக்கள் இழைத்த தவறை சரிசெய்யும் பொருட்டு ராஜபக்சர்களின் ஆட்சியை மீளக் கட்டியெழுப்ப மக்கள் தயாராகியுள்ளனர்.
2029ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். இதனால் நாமல் ராஜபக்சவை எந்த வழியிலாவது நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 19 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan