வாகன கொள்வனவுக்கு வந்த நபர்களால் நூதன முறையில் வாகனம் திருட்டு
முல்லைத்தீவில் வாகன கொள்வனவுக்கு வந்த நபர்களால் நூதன முறையில் வாகனம் திருடப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த மாதம் முல்லைத்தீவு முள்ளிவாய்காலினை சேர்ந்த நபர் ஒருவர் டிக்ரொக் (tiktok)ஊடாக தனது ஹயஸ் வாகனத்தினை விற்பனை செய்ய விளம்பரப்படுத்தியுள்ளார்.
அந்த காணொளியினை பார்வையிட்ட ஒருவர் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு வாகனத்தினை பார்வையிட மற்றும் ஒரு நபருடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வாகனத்தினை வாங்கிச் சென்றவர்
இந்த நிலையில் வாகனத்தின் விலையினை 80 இலட்சம் ரூபா சொல்லியுள்ளார். வாகனம் லீசிங்கில் நிற்பதால் முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபா பணத்தினை கொடுத்துவிட்டு வாகன புத்தகத்தினை வாங்கும் போது மீதிப்பணம்கொடுப்பதாக சொல்லிவிட்டு வாகனத்தினை எடுத்துவிட்டு சென்றுள்ளார்கள்.

இந்த நிலையில் வாகனம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது என நினைத்து அவரிடம் இருந்த நகைகளை அடைவு வைத்து இருந்த பணத்துடன் சேர்த்து லீசிங் கம்பனிக்கு கட்டியுள்ளார்.
வாகனத்தின் உரிமை மாற்றப் படிவத்தில் உரிமையாளர் கையொப்பமிடாதவரை அவரது வாகனத்தை வேறு எவருடைய பெயருக்கும் மாற்ற முடியாது என நான் நம்பியிருந்த அவருக்கு ஏமாற்றம் கிடைத்தது.
வாகனத்தினை வாங்கி சென்றவர்களின் தொலைபேசி இலக்கம் வேலை செய்யாத காரணத்தினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வாகனத்தினை கொள்வனவு செய்தவர் வாகனத்தினை இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒருநாள் பெயர்மாற்றம் ஊடாக போலியான கையெழுத்தினை வைத்து பெயர்மாற்றி மாத்தளை மாவட்டத்தில் 78 இலட்ம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்கள்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்த மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் பிடித்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தும் வாகன உரிமையாளர் தனது நண்பர்கள் ஊடாக ஆளினை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வவுனியாவில் வைத்து அவரை இனம் கண்டு அழைத்துவந்துள்ளார்

யாழ்ப்பாணம் அச்சுவேலியினை சேர்ந்த நபரும் அவருடன் சேர்ந்தியங்கும் குழுவும் இவ்வாறான மோசடி நடவாக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த நபரை 12.10.2026 இன்று முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.