வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு
இணையவழி ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் அமைப்பு தற்காலிகமாக சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை மேற்படி திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி முதல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரிசெய்யும் பணிகள்
அதன்படி, இந்த சேவைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை செயலிழந்திருக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த செயலிழப்பை சரிசெய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
