வாகன இறக்குமதிக்கு அனுமதி: விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவதோடு, அதிக வரி விதிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு (2025) முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டியில் நேற்று (16ஆம் திகதி) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு
அந்நிய செலாவணி கையிருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே கட்டண விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
150,000 முதல் 500,000 ரூபா வரை சம்பளம் பெறுவோருக்கு விதிக்கப்படும் வரியை 15 முதல் 23 சதவீதமாக குறைக்கும் யோசனையை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசாங்கம் 17 வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன்களை செலுத்தவில்லை என்றும், உள்நாட்டு கடன்கள் அனைத்தும் செலுத்தப்படுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
பணக்காரர்களுக்கு மேலும் சலுகைகள்
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அமெரிக்க மத்திய வங்கிகளில் கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 5.2 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முக்கிய வேட்பாளர்கள் இருவரும் வருமான வரியை குறைப்பதாக கூறியுள்ளதாகவும், இதனால் பணக்காரர்களுக்கு மேலும் சலுகைகள் கிடைக்கும் என்றும், ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் மூன்று இலட்சம் பேர் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
