ஹன்ரர் ரக வாகனம் கட்டுப்பாட்டையிழந்து விபத்து: இருவர் படுகாயம் (Video)
வவுனியா- பம்பைமடுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (07) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனம் ஒன்று வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள வவுனியா பல்கலைக்கழகம் முன்னால் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் ஹன்ரர் வாகனத்தின் சாரதியும், நடத்துநரும் படு காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
