வாகன இறக்குமதி தொடர்பான அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு! வெளியான அறிவிப்பு
அடுத்த வருடம் (2025) பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னைய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
கடந்த அரசாங்கத்தின் அனுமதி
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஆறு பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதால், வாகன இறக்குமதிக்கு கடந்த அரசாங்கத்தினால் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியின் பின்னர் தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த திட்டமிட்டுள்ளதாக கடந்த அரசாங்கம் மேலும் அறிவித்திருந்தது.
இதன்படி, வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam