வாகன இறக்குமதிக்கு அனுமதித்தால் ஏற்படும் பாதக நிலை! அதள பாதாளத்தில் விழும் ரூபா
வாகன இறக்குமதியை அனுமதித்தால் இலங்கையில் இருந்து பெரியளவில் டொலர் வெளியேறி இலங்கை ரூபாவின் பெறுமதி மிக்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதை இலங்கை அரசாங்கமே அறிவித்துள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம்(K.Amirthalingham) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மலிவான பொருட்கள் ஆகும். இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டுச் செலாவணி மிகக் குறைவு.
ஆனால் இறக்குமதி செய்யக் கூடிய பொருட்கள் மிக பெறுமதி மிக்கவை. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் ஆகியவை விலை கூடியவை.
அதில், மிகப் பெரிய செலவை ஏற்படுத்தக் கூடியவை இந்த வாகனங்கள். குறிப்பாக ஜப்பானில் இருந்துதான் அதிகளவிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த வாகன இறக்குமதியை தடுத்திருப்பதால் தான் டொலரினுடைய வெளியேற்றம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வாகன இறக்குமதியை இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாக இருந்தால் பழையபடி டொலர் பெரியளவு வெளியேறி இலங்கை ரூபாவினுடைய பெறுமதி பாரியளவில் குறைவடையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |