பல இறக்குமதி தடைகள் நீக்கம்! வாகன இறக்குமதி கட்டுப்பாடு குறித்து இன்று வெளியான புதிய தகவல்
இலங்கையில் பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல் வெளியிட்டுள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (10.06.2023) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நேற்று இரவு முதல் நீக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி கட்டுப்பாடுகள்
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2020 ஏப்ரல் 16ஆம் திகதி 747 வகையான பொருட்களுக்கும், 2020 மே 22ஆம் திகதி 1077 வகையான பொருட்களுக்கும், 2022 ஆகஸ்ட் 24ஆம் திகதி 1467 வகையான பொருட்களுக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், அந்த பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் அவ்வப்போது நீக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், 928 வகையான பொருட்களுக்கு மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றில் 306 வாகனங்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |