வாகன இறக்குமதி! கூடுதல் தீர்வை வரி விதிப்பின் பின் பதிவான சடுதியான மாற்றம்
வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (23.07.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட நாணயக் கடன் கடிதங்களின் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
நாணயக் கடன் கடிதங்கள் திறப்பில் வீழ்ச்சி
எனினும், கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமையில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் திகதி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், ஜூலை 21ஆம் திகதி 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மாத்திரமே நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கூடுதல் தீர்வை வரி நடைமுறைக்கு வந்த மே மாதம் 15ஆம் திகதியன்று மாத்திரம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO