வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன இறக்குமதி தடையை நான்கு கட்டங்களாக தளர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த குழு இது தொடர்பான காலக்கெடுவையும் முன்வைத்துள்ளது. குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்ததன் பின்னர் ஜனாதிபதி இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
சுங்க வருமானத்தை பெறுவதற்கான வழி
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் வருடாந்தம் சுமார் 340 மில்லியன் ரூபா சுங்க வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்கீழ், வர்த்தக வாகனங்கள், பொது போக்குவரத்து சேவை வாகனங்கள், பின்னர் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கும் இறுதியாக கார்கள் மற்றும் சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |